2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையை தடுத்து நிறுத்திய எரிபொருள் நிலைய ஊழியருக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 25 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், சாலியவௌ நகரில் அமைந்திருக்கும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறவிருந்த கொள்ளைச் சம்பவத்தினை துணிகரமாக தடுத்து நிறுத்திய எரிப்பொருள் நிலையத்தின் ஊழியருக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

குறித்த தினம் இரவு தான், வரவு செலவுகளினை மதிப்பிட்டு கொண்டிருந்தவேளை நிலையத்தின் பின்பக்கம் சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து தன்னுடன் இருந்த ஊழியரான பிரதாத் விஸ்வஜித்தினை பின் பக்கமாக என்ன சத்தம் என்று பார்க்க கூறினேன்.

அப்போது அவர் பின் பக்கம் பார்த்தவேளை 5பேர் சிறிய ஆயுதங்களுடன் கொள்ளையிட தயாராகவிருந்தனர். உடனடியாக துணிகரமான முறையில் அக்கொள்ளைக்காரர்களினை விரட்டிய அவர்களில் ஒருவனை பிடித்து பொலிஸிலும் ஒப்படைத்தார் என நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் டி.எம்.திஸாநாயக்க சம்பவத்தினை விபரித்தார்.

இந்த துணிகரமான செயலினை பாராட்டி சாலியவௌ வர்த்தக சங்கம் மற்றும் கிராம பாதுகாப்பு குழு என்பன பிரதாத் விஸ்வஜித்துக்கு பரிசுகளினை வழங்கின. இப்பரிசுகளினை புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், அமைச்சருமான பிரியங்கர ஜெயரத்ன வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X