2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஐவர் அநுராதபுரத்தில் கைது

Menaka Mookandi   / 2012 ஜனவரி 26 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் நகரத்தை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களினூடாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் புனித பூமிப் பகுதி (சிங்ககணு பகுதி), யாழ்ப்பாணம் சந்தி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 20 ஹெரோயின் பக்கற்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பக்கற் ஹெரோயின் 500 முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X