2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்க செயற்பாடுகளில் இளைஞர்களையும் இணைத்துக் கொள்ளும் நோக்குடன் செயலமர்வு

Super User   / 2012 ஜனவரி 30 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லிணக்க செயற்பாடுகளில் இளைஞர்களையும் இணைத்துக் கொள்ளும் நோக்குடன் நல்லிணக்க்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் இளைஞர்களுக்கான ஒரு  செயலமர்வை அநுராதபுர, தலாவ சாமசேவய நிலையத்தில நடத்தியது.
 
இந்த செயலமர்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, அநுராதபுரம், புத்தளம், பொலநறுவை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

புதிய இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதிலும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் இளைஞர்களுக்கு ஒரு பிரதான பாத்திரம் உள்ளது என்பதே இச்செயலமர்வின் தொனிப்பொருளாக அமைந்தது.

இந்த செயலமர்வினை ஏற்பாடு செய்வதற்கு நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியத்திற்கு பக்கபலமாக, 3லு Nநுவு எனப்படும் இளைஞர் அமைப்பு, மகாத்மா காந்தி நிலையம், சாமசேவய அமைப்பு மற்றும் முஸ்லிம் எய்;ட் இலங்கை கிளை ஆகியன பக்கபலமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .