2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாணத்தில் நன்னீர் மீன்பிடி வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

வடமேல் மாகாணத்தில் உள்ள ஐம்பது குளங்களைத் தெரிவு செய்து அக்குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பை அதிகப்படுத்துவதின் ஊடாக அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றினை வடமேல் மாகாண கடற்றொழில், வீடமைப்பு நிர்மாணத்துறை, மின்சக்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா இருபத்தி ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு அக்குளங்களுக்குள் நன்னீர் மீன் குஞசுகள், மற்றும் இறால் குஞ்சுகள் இலவசமாக விடப்பட்டு வருகின்றன.

புத்தளம் மாவட்டத்திலுள்ள நவகத்தேகம பிரதேச குளம் ஒன்றிலும் இவ்வாறு இறால் குஞ்சுகள் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவினால் நேற்று முன்தினம் விடப்பட்டன.

அத்துடன் நன்னீர் மீன்வளர்ப்பு தொடர்பான நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றிய பயிற்சிகளும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதோடு, அக்குளங்களுக்கு அருகில் வசிக்கும் மீனவத் தொழிலில் ஈடுவோருக்குத் தேவையான ஏனைய வசதிகளும் செய்து கொடுக்க வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் நவகத்தேகம, கோன்கடவள குளத்தினுள் இருபத்தி ஐயாயிரம் நன்னீர் இறால் குஞ்சுகள் அமைச்சரினால் விடப்பட்டதுடன், மீனவர்கள் இருபத்தி ஐந்து பேருக்கு மீனபிடி வலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் இருவருக்கு துவிச்சக்கர வண்டிகளும்   மீன் பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X