Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ், எம். என். எம் ஹிஜாஸ், எஸ். எப். ஜெசீரா)
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் ஆரம்ப தின நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் சுமையா றிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற முதல் நாள் நிகழ்வில் வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆப்தீன் எஹியா, ஏ. எச். எம். றியாஸ், என். டி. எம். தாஹிர், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம். நவவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாயிற் கதவு திறந்து வைக்கப்பட்டதுடன் அத்துடன் மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்றது.
இரண்டாவது தினமான இன்று புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ள பொன்விழா நிகழ்வுகளில் கண்காட்சி நிகழ்வுகள், கல்லூரியின் நினைவுத் தூபி திறப்பு, பொன்விழா சிறப்பு மலர் வெளியீடு, இணையத்தள அங்குரார்ப்பணம், கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு வைபவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
kings 11 chellanging girls Saturday, 04 February 2012 03:46 PM
உண்மையிலேயே மிகவும் அழகாக உள்ளது. பாத்திமாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்*** Saturday, 04 February 2012 04:53 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
Naleefa Saturday, 04 February 2012 09:56 PM
அருமையான ஏற்பாடு. விஞ்ஞானக் கல்லூரியின் கண்காட்சி கூடங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றாக உள்ளது. பாத்திமாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago