2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் இருந்த நீதிமன்றப் பதிவாளர் கைது

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடமை நேரத்தில் மதுபோதையில் காணப்பட்ட  புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றப் பதிவாளரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பதிவாளரான ஏ.சி.குணசேகர நேற்று வியாக்கிழமை 3.30 மணியளவில் நீதிமன்றத்திலுள்ள தனது அலுவலகத்தில் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொண்ட பின்னர் அவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.

அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் இவர் மதுபோதையில் காணப்பட்டதால் இவர் பல சந்தர்ப்பங்களில் சிரேஷ்ட அதிகாரிகளினால் கண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 10 February 2012 02:19 PM

    ஒரு கோப்பையிலே இவர் பதிவிருக்கு,இவர் கோப்புகளில் பல கிருக்கிருக்கும். இது ஸ்ரீலங்காவா அல்லது மது லண்காவா /

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .