2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினைப் பார்வையிட வருபவர்கள் மூன்று பிரதான பாதைகள் ஊடாகப் பிரவேசிக்க முடியும் என ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றது.

 

புத்தளம் அநுராதபுரம் பாதையின் ஊடாக பிரவேசிப்போர்  நொச்சியாகம ஒயாமடுவ வீதியின் ஊடாக வருகை தர முடியும் என்பதோடு சுமார் 3000 வாகனங்களை நிறுத்தக் கூடிய வாகனத் தரிப்பிடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அநுராதபுரம் விலச்சிய வீதியின் ஊடாக பிரவேசிக்க முடியும் என்பதோடு 5000 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

தந்திரிமலை பிரதேசத்திலிருந்து வருகை தரும் மக்கள் தந்திரிமலை விலச்சிய விPதியின் ஊடாக பிரவேசிக்க முடியும் என்பதோடு 3000 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பஸ் வண்டிகளில் வருகை தரும் மக்களின் நன்மை கருதி  ஒயாமடுவ கண்காட்சி பூமிக்கருகில் பஸ் தரிப்பிடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X