Kogilavani / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
மரதன்கடவள ஹபரன வீதியின் உல்பத்த பள்ளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியொன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago