Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
தேசத்திற்கு மகுடத்தினையொட்டி அநுராதபுர மாவட்டத்தில் நீதி அமைச்சினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்; நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
நொச்சியாகமவில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, அநுராதபுரம் மாவட்டத்தில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் இணக்க சபை உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நீதியமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், நீர்ப்பாசன மற்றும் நீர்; முகாமைத்துவ பிரதியமைச்சர் டபிள்யூ. பி ஏக்கநாயக்க மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, நொச்சியாகம ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விஜயம் மேற்கொண்டு முக்கிய விடயங்கள் குறித்து ஊர் மக்களுடன் கலந்துரையாடினார்.
அமைச்சருடன் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ பிரதியமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்கவும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
muhammed Wednesday, 08 February 2012 11:45 PM
தேங்க்ஸ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago