2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் தள வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ் வைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்ட ஒருவரின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின் அங்கு வந்த மாகாண சபை உறுப்பினரொருவர் வைத்தியர்களினை திட்டியனையடுத்து இன்று இப் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையில் கடமைபுரியும்  வைத்தியர்கள், தாதிமார்கள், ஊழியர்கள் அனைவரும் இப் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த மாகாணசபை உறுப்பினர் வைத்தியசாலைக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை இவ் வேலை நிறுத்தம் தொடருமென பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள வைத்தியரொருவர் தெரிவித்தார்.

இதனால் வைத்தியசாலைக்கு வரும் வெளி நோயாளர்கள் சிகிச்சையின்றி திரும்பிச் செல்வதுடன் சிலர் அங்கு தரித்து நிற்கின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X