2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்குதலில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் காவடியாவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் தீக்காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு ஒன்பது மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு தமது மீன்பிடித் தொழிலுக்காக இவர்கள் இருவரும் கடலுக்குச் சென்றிருந்த சமயம் இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 30 வயதுடைய டப்ளிவ். லோவ் என்பவர் உயிரிழந்ததோடு மற்றவர் தீக்காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X