Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சின்னப்பாடு கிராம மீனவர்களுக்கு ஓடங்களும் படகுகளும் சலுகை அடிப்படையில் நேற்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
40,000 ரூபா பெறுமதியான ஓடங்களும் 150,000 ரூபா பெறுமதியான இயந்திரப் படகுகளும் 50 வீத சலுகை அடிப்படையில் வடமேல் மாகாண பாதை அபிவிருத்தி, மின்சாரம், நிர்மாணத்துறை, கடற்றொழில் அமைச்சினால் சின்னப்பாடு கூட்டுறவு மீனவு சங்கம் மூலம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமேல் மாகாணசபை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, ஓடங்களையும் இயந்திரப் படகுகளையும் மீனவர்களுக்கு வழங்கி வைத்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago