2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கார் மோதியதில் மாணவன் மரணம்; சாரதிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் ஆனமடுவ வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பமொன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் மரணமடைந்தமை தொடர்பில் காரின் சாரதியை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே சாரதியை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை பங்கதெனிய கருக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பளுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த பங்கதெனிய கருக்குளி பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் அனுஷ்க புஷ்பகுமார (வயது 9)  என்ற மாணவன் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இம்மாணவன் மீது ஆனமடுவவிலிருந்து சிலாபம் நோக்கி வந்த காரொன்று மோதியதாகவும் இதில்   படுகாயமடைந்த மாணவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X