Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
'2012 ஆம் ஆண்டு இறுதியில் அனைவருக்கும் மின்சாரம்' எனும் திட்டத்தின் கீழ் வடமேல் மாகாண பாதை அபிவிருத்தி, மின்சாரம், நிர்மானத்துறை, கடற்றொழில் அமைச்சினால்; புத்தளம் மாவட்டத்தில் 200 வறிய மக்கள் தெரிவு செய்யப்பட்டு சூரிய மின்கலம் மூலம் அவர்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென வடமேல் மாகாண பாதை அபிவிருத்தி, மின்சாரம், நிர்மானத்துறை, கடற்றொழில் அமைச்சு சுமார் 20 இலடசம் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.
இதன் முதற்கட்டமாக புத்தளம், சீமாவெளி கிராமத்தில் மின்சார வசதியின்றி வசித்து வந்த 20 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரம் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைப்பெற்றது.
சுமார் முப்பதாயிரம் ரூபா பெறுமதியான சூரிய மின்கலங்கள் 50 வீதம் சலுகையடிப்படையில் இக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண பாதை அபிவிருத்தி, மின்சாரம், நிர்மானத்துறை, கடற்றொழில் அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
3 hours ago