Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
நாச்சியாதீவு பஹயாகுளம் பகுதியில் பெண்ணொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹிதோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேனையொன்றில் காவல் வேலையில் ஈடுப்பட்டிருந்த (53 வயதுடய) மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பெண்ணின் கணவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இப் தாக்குதலை மேற்கொண்ட நபருடன் சில மாதங்களாக சேர்ந்து வாழ்ந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சேனையில் காவல் காத்துக் கொண்டிருந்த வேளையில் இருவருக்குமிடயில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு சந்தேக நபர் பெண்ணின் தலையில் தாக்கியுள்ளதாகவும் குறித்த பெண்ணை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரும் நஞ்சருந்தி தற்பொழுது நெலுபாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago