2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மதுரங்குளியில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்,எம்.என்.எம்.ஹிஜாஸ்)

எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து மதுரங்குளி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.  முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிபொருளுக்கக்ன மானியம் எமக்கு வேண்டாம். பழைய விலைக்கு எமக்கு மண்ணெண்ணையை வழங்க வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை எரிக்க பல தடவைகள் முயற்சித்தபோதிலும், பாதுகாப்புத்தரப்பினர் அதனைத் தடுத்து டயர்களை நீர் ஊற்றி அணைத்தனர்.

மதுரங்குளி நகரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X