2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி; பலர் காயம்

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமாகியுள்ளார். சிலாபத்திலுள்ள மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மீனவர் மரணமடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இதனை பொலிஸார் மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • hk Wednesday, 15 February 2012 07:46 PM

    அதற்கென்ன ஒரு சனாதிபதி ஆணைக்குழு அமித்திட்டாப் போச்சி!

    Reply : 0       0

    meenavan Wednesday, 15 February 2012 09:24 PM

    அப்பாவி மீனவரின் உயிர் இழப்பு அவரது குடும்பத்தை அனாதையாக்கி விட்டது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X