Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
சிலாபத்தில் ரயில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை இரவு கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயிலுடன் மோதியே இந்த விபத்த சம்பவித்ததாகவும் சிலாபம் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.
சிலாபம் வட்டக்கள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த கனகரத்தினம் (வயது 40) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago