2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் உயிரிழந்த மீனவரின் இறுதி கிரியைகள் நாளை

Kogilavani   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மீனவரின் இறுதி கிரியைகள் நாளை சனிக்கிழமை சிலாபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நபரின் மனைவி குவைட் நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்புகின்றார். அவர் நாடு திரும்பிய பின் உயிரிழந்த மீனவரின் இறுதி கிரியை நடைபெற்றவுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மீனவருக்கு அனுதாபம் தெரிவிக்கும்  வகையிலும்,  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததைக் கண்டித்தும் சிலாபம் நகரில் வெள்ளைக் கொடிகளும், கறுப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளதோடு, சிலாபத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை மேற்படி மீனவருக்கு இறுதி அஞ்கலி செலுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நேற்று சிலாபத்திற்கு விஜயம்மேற்கொண்டார். அவருடன் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர உட்பட பலரும் அங்கு சென்றிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X