2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

எரிபொருள் நிவாரணம் வேண்டாம்; பழைய விலையே வேண்டும்: மீனவர்கள்

Super User   / 2012 பெப்ரவரி 19 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா)

அரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் நிவாரணம் தமக்கு வேண்டாம் என மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விலை அதிகரிப்புக்கு முன்னர் விற்பனை செய்த பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு, தம்மிட்ட கார்தினல் குரே நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இதனை வற்புறுத்தி கூறியுள்ளனர்.

பிரதி அமைச்சர் சரத் குணரட்ன மற்றும் மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொழும்பு, முகத்துவாரம் முதல் புத்தளம் வரையுள்ள மீனவ சங்கங்களின் 100 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் புதன்கிழமை இந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தமது முடிவை தெரிவிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சாதகமான பதில் கிடைக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கடற்கரை தெரு ஐக்கிய மீனவ சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை கடலுக்கு செல்வதில்லை எனவும் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X