2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மர்ம வெடிபொருள் பறந்து வந்து கூரையின் மீது விழுந்து வெடிப்பு: புத்தளத்தில் சம்பவம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, எம்.என்.எம்.ஹிஜாஸ், எம்.எஸ்.மும்தாஜ்)

புத்தளம், தில்லையடி, 30ஆம் வீட்டுத் திட்ட வீதியில் உள்ள வீடொன்றில் ஷெல் போன்றதொரு அமைப்பைக் கொண்ட மர்ம வெடிபொருளொன்று பறந்து வந்து வீழ்ந்து வெடிப்புக்குள்ளாகியதில் குறித்த வீட்டின் கூரைப்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தகவல் தருகையில்,

புத்தளம், தில்லையடிப் பகுதியிலுள்ள இரும்புத் தொழில் செய்யும் வியாபாரி ஒருவரது வீட்டின் கூரை மீதே மேற்படி மர்மப் பொருள் பறந்துவந்து விழுந்து வெடித்துள்ளது. திடீரென வந்த இந்த மர்மப் பொருள் மேற்படி வீட்டின் படுக்கை அறைக்குள் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ள போதிலும் வீட்டிலுள்ள எவரும் பாதிக்கப்படவில்லை.

இது குறித்து உடனடியாக புத்தளம் பொலிஸாருக்க அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வஜரைந்த பொலிஸாரும், விமானப்படை வீரர்களும் இராணுவத்தினரும் மேற்படி மர்மப் பொருள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த இரும்புத் தொழிலாளியின் வீட்டில் தொழில்புரிந்த ஒருவரையும் புத்தளம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X