Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து சிலாபம் மீனவர்கள் மேற்கொண்டிருந்த மீன்பிடித் தொழிலுக்கு செல்வதில்லை என்ற பகிஸ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் கத்தோலிக்க ஆயர் தலைமையில் நேற்று மாலை சிலாபம் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த, சிலாபம் பிரதேச செயலாளர் நிலந்தி பெர்னாண்டோ ஆகியோருடன், சிலாபம் பிரதேச மீனவர் சங்கங்ககில் பிரதிநிதிகளும், சிலாபம் நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆறு தினங்களுக்கு வெளியில் இயந்திரம் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 30 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு இதன்போது வடமேல் மாகாண அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் இதற்கு மேலும் சலுகைகளை வழங்கு எதிர்பபார்ப்பதாகவும் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
இதன் பின்னர் நேற்று இரவு முதல் தமது பகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு மீண்டும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளதாக சிலாபம் மீனவச் சங்கங்களில் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 May 2025
24 May 2025
24 May 2025