Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
இவ்வருடம் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீட்டு பணிகளுக்காக முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் புள்ளிவிபர உத்தியோகத்தர் தெரிவித்தார்.
முந்தல் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்குரிய இரண்டு நாள் பயிற்சிகள் நேற்றுடன் வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சிகள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வௌ;வேறாகவும், பிரிவு பிரிவாகவும் நடாத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் முழுமையான பயிற்சிகள் முந்தல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவர்களுக்குரிய ஆவணங்கள், கோவைகள் உட்பட குடிசன கணக்கெடுப்பிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் மேற்பார்வை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபர உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் கிராம உத்தியோகத்தர்கள் மேற்பார்வை உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, கிராம உத்தியோகத்தர் இல்லாது பதில் கடமையாற்றும் பிரிவுகளுக்கு அலுவலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்பார்வை உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குடிசன கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 May 2025
24 May 2025
24 May 2025