2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் மண்ணெண்ணெய் நிவாரண அட்டைகள் கையளிப்பு வழங்கும்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மின்சாரம் வசதியற்ற குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்கான நிவாரண அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக இன்று மாலை புத்தளம், மணல்தீவு சமுர்த்தி காரியாலயத்தில் 100 குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்கான நிவாரண அட்டைகள் வழங்கப்பட்டது.

மணல்தீவு சமுர்த்தி அதிகாரி எம்.பி.வி. பாலநாதன் தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின்  உப தலைவர் பமுனு ஆராய்ச்சி கலந்து கொண்டு நிவாரண அட்டைகளினை வழங்கினார்.

இந்நிவாரண அட்டைகள் மூலம் மாதாந்தம் 200 ரூபாவுக்கு கூட்டுறவு சங்கங்களினூடாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X