2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை மீனவ சங்க கூட்டத்தின் பின் எரிபொருள் மானியம் பெறுவது தொடர்பில் தீர்மானம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அகில இலங்கை மீனவ சங்க கூட்டத்தின் பின்னரே எரிபொருள் மானியத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும்  எனவும் அதுவரை மானியத்தினை பெற்றுக்கொள்வதில்லை எனவும் புத்தளம் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

புத்தளத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற  புத்தளம் மீனவ சங்க உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு  மீனவர்கள் கைகளினை உயர்த்தி தமது ஆதரவினை தெரிவித்தனர்.

வளர்பிறை மீனவ கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்.எம்.ரியாஸ், ஸ்டார் மீனவ கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.ஓ.ரிபாய் டீன், அம்மர் மீனவ கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.நவாஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X