2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கடத்தப்பட்ட பாலர் பாடசாலை சிறுமி மீட்பு; உறவினர் உட்பட இருவர் கைது

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 24 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், முந்தல் பிரதேச பாலர் பாடசாலையில் கல்வி பயின்றுக்கொண்டிருந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட மூன்றரை வயதுச் சிறுமி இன்று வெள்ளிக்கிழமை, பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையை அடுத்து மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி சிறுமியைக் கடத்திச் சென்று சிறுமியின் பெற்றோரிடம் கப்பம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அச்சிறுமியின் உறவுமுறை அண்ணனொருவரும் 45 வயதான பெண்ணொருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் புதன்கிழமை கடத்தப்பட்டிருந்த மேற்படி சிறுமியை விடுவிக்க வேண்டுமாயின் 50 இலட்சம் ரூபாவைக் கப்பமாக கொடுக்க வேண்டம் என்று அச்சிறுமியின் தாயாரிடம் கடத்தல்காரர்கள் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் அத்தொகைப் பணம் தன்னிடம் இல்லாததால் அதனைக் குறைத்துக்கொள்ளுமாறு சிறுமியின் தாயார் வேண்டிக்கொண்டதை அடுத்து 15 இலட்சம் ரூபாவினை வழங்குமாறு மேற்படி கடத்தல்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், அத்தொகைப் பணத்தை எடுத்துக்கொண்டு சிறுமியின் தாயார் மாத்திரம் பஸ்ஸில் வர வேண்டும் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த பொலிஸார், சுமார் 200 பேர் அடங்கிய 5 விசேட பொலிஸ் குழுக்களை சிவில் மற்றும் சீருடையில் முந்தல் மற்றும் ஆரச்சிகட்டுவ பிரதேசங்களில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தியிருந்தனர்.
 
இந்நிலையில், ஆரச்சிகட்டுவ பிரதேசத்துக்கு சிறுமியையும் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த பிரதான சந்தேகநபரும் பெண்ணும், சிறுமியின் தாயிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டதுடன் அப்பகுதியில் பொலிஸ் நடமாட்டம் இருப்பதைக் கண்டு சிறுமியை கையளிக்காமல் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாகப் பயணித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார், வழிமறித்து சிறுமியை மீட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் சந்தேகநபர்களால் கப்பமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட 15 இலட்சம் ரூபாப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி, இத்தாலியிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய சிறுமியின் தந்தையிடம் கையளிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முந்தல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புகைப்படங்களைக் காண்பதற்கு


You May Also Like

  Comments - 0

  • mohamed Saturday, 25 February 2012 01:05 AM

    பொலிசாரின் நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள்.....

    Reply : 0       0

    hiyabdeen Saturday, 25 February 2012 01:36 AM

    கோடி நன்றிகள் போலீஸ் அதிகாரிகளுக்கு... மிக வேகமாக நடவடிக்கை எடுத்து அந்த சிறுமியை பெற்றோரிடம் கொண்டு சேர்த்தமைக்கு......

    Reply : 0       0

    mahroof Saturday, 25 February 2012 01:46 AM

    துரோகிகள் தூரத்தில் இல்லை. நமக்குள்ளேயே ஒளிந்து வாழ்கிறார்கள். பொலிசாருக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    mohammed Hiraz Saturday, 25 February 2012 02:53 AM

    என்ன கொடுமை இது சிறுமியின் பெற்றோர் எவ்வளவு பதறி பதறி இருப்பர்!!! அவர்களின் அந்த நேர பதர்வைக்கு இந்த சிறுமி கிடைதிருக்காவிடின் எதுதான் ஆறுதலாக இருந்திருக்கும்? மனித அரக்கர்கள் இந்த வேலையை செய்தோரை....................

    Reply : 0       0

    easternbrother Saturday, 25 February 2012 04:20 AM

    well done ......hats off.......to police ........but . halo editor publish the criminals potos too here........why u hide ??

    Reply : 0       0

    kalpiti sister Saturday, 25 February 2012 04:57 AM

    இத பார்க்கலயா ஈஸ்டர்ன் பிரதர்: http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36538-2012-02-24-13-59-49.html

    Reply : 0       0

    vallal Saturday, 25 February 2012 07:21 AM

    இறைவனுக்கு முதல் நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X