2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அரிய உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்த முற்பட்ட ஆறு பேர் கைது

Super User   / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, எஸ்.எம்.மும்தாஜ்)

நக்கிள்ஸ் மலைத்தொடர், சிங்கராஜவனம், சீகிரிய, யால, கல்பிட்டி பவளப்பாறைகள் போன்ற இடங்களிலிருந்து இலங்கையின் அரிய உயிரினங்களை  பிடித்து வெளிநாட்டுக்கு கடந்த முற்பட்ட ஆயத்தமாகவிருந்த   வெளிநாட்டுப் பிரஜைகள் ஆறு பேரை புத்தளம் மாவட்ட வனவள அதிகாரிகள் கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஜேர்மனிய  பிரஜைகள், இரண்டு பெல்ஜிய நாட்டுப் பிரஜைகள், ஒரு வெனிசூலா  பிரஜை மற்றும் ஒரு அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை ஆகியோர் அடங்குகின்றனர்.

 

 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறுமதியான வன வாழ் உயிரினங்கள் பலவற்றுடன் அவற்றைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் இன்று புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம். ஏ. பசால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் தலா 50.000  ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சந்கேதநபர்களின் கடவுச்சீட்டுகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்தச் சுற்றிவளைப்புக்கள் கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்று வந்ததாக புத்தளம் மாவட்ட வனவள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X