2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நாத்தாண்டியாவில் ஒருவர் சுட்டுக்கொலை

Kogilavani   / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், நாத்தாண்டிய மைலாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த எதிரிகுலசேகர ருக்மல் ஹஷான் (வயது 42) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேற்படி நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் தனது 5 வயது மகளை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு மோட்டார் சைக்களில் பயணித்தபோதே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் 4 இடங்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாகவும் 9மி.மி ரக துப்பாக்கியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் இது  தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X