Super User / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் காசிமிய்யா அரபு கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அரபு கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், காசிமிய்யா அரபு கல்லூரியின் முன்னாள் நம்பிக்கையாளர் சபை தலைவரான மர்ஹூம் கலாநிதி காமில் ஆசாத்தின் மகளும் முன்னாள் நிதி அமைச்சர் மர்ஹூம் நெய்னா மரிக்காரின் பேத்தியுமான செல்வி ஆயிஷா காமில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள், கல்லூரி கல்வி நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியோர், பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியோர் மற்றும் கல்லூரியின் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்றோர் என பல மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பரிசளிப்பு வைபவத்துடன் பெற்றோர் ஒன்று கூடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago