2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கலாஓயா பாலத்தில் நீர்மட்டம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளத்திலிருந்து எலுவன்குளம் ஊடாகச் செல்லும் கலாஓயா பாலத்தின் மீது நீர்மட்டம் அதிகரித்து செல்வதால் சிறிய மற்றும் நடுத்தர வாகனங்களில் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை முதல் இந்த நிலைமை காணப்படுவதாகவும் அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் கடற்படையினர் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பகுதியில் பெய்த மழை காரணமாக கலாஓயாவை ஊடறுத்துச் செல்லும் நீரின் வேகமும் அதிகரித்து காணப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்களில் பயணிக்க வந்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X