2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் கல்வி வலய தமிழ் தினப் போட்டிகள்

Kogilavani   / 2012 மார்ச் 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் கல்வி வலய மட்ட தமிழ் தின போட்டியின்  எழுத்து மூல போட்டிகள் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதற்காக புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் மொழி மூல  பாடசாலைகளின்  அதிபர்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை தயார்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் புத்தளம் வலயக் கல்வி பணிமனையில் இஸ்லாம் பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அபுல் ஹூதா கேட்டுள்ளார்.

புத்தளம் கல்வி வலயத்திற்குள் புத்தளம், கற்பிட்டி, மதுரங்குளி, ஆனமடுவ, பள்ளம ஆகிய 5 கல்வி கோட்டங்கள் உள்ளபோதிலும் ஆனமடுவ, பள்ளம தவிர்ந்த ஏனைய மூன்று கோட்டங்களிலும் குறித்த எழுத்து மூல போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதன்படி புத்தளம் கல்வி கோட்டத்திற்குற்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு புத்தளம் இந்துக் கல்லூரியிலும், கற்பிட்டி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கு நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், மதுரங்குளி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கு கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் இப்போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய போட்டிகள் யாவும் அந்தந்த கோட்ட மட்டங்களில் நடைபெறும் என்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் இஸ்லாம் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அபுல் ஹூதா மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X