2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கண்டக்குழி கிராம மீனவர்களுக்கு படகுகளுக்கான இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 மார்ச் 04 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கண்டக்குழி கிராம மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் ஒரு தொகுதி படகுகளுக்கான இயந்திரங்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன.

வடமேல் மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, மின்சாரம், நிர்மாணத்துறை, கடற்றொழில் அமைச்சினால் புத்தளம் மாவட்ட மீனவர்களுக்கு ஓடம், படகுகள், இயந்திர படகுகள், படகுகளுக்கான இயந்திரங்கள் என்பன 50 சதவீத மானிய அடிப்படையில வழங்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையிலே கண்டக்குழி கிராம மீனவர்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் ஆகியோர் கலந்துகொண்டு படகுகளுக்கான இயந்திரங்களினை மீனவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதன்போது, சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான படகு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X