Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 04 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்,எஸ்.எம்.மும்தாஜ்,ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, இர்சாத் ரஹ்மதுல்லாஹ்)
அரசாங்கத்தின் ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவற்றுக்கு இரண்டு உதாரணங்களே போதுமெனவும் அவற்றில் நுரைச்சோலை அனல்மின்சார திட்டம் ஊழலுக்கும் ஓயாமடுவையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சி வீண்விரயத்திற்கும் சிறந்த உதாரணங்களென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தினை புனருத்தாபனம் செய்வதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு புத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எரிபொருட்களுக்கான விலை உயர்வுக்கு உலக நாடுகளின் விலை ஏற்றம் காரணமில்லையெனவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, புத்தளம் பிரதேச மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 May 2025
24 May 2025
24 May 2025