2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விலையுயர்வை மூடிமறைக்கவே அரசு ஜெனீவா பிரச்சினையை முன்வைத்தது: ரணில்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

எரிபொருள் விலையுயர்வை மூடிமறைக்கவே அரசாங்கம் ஜெனீவா பிரச்சினையை முன்வைத்து அப்பாவிப் பொதுமக்களை வீதியில் இறக்கி பலிக்கடாவாக்கியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  
    
அநுராதபரம் அசோக் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மோசடி நிறைந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாம் பேதங்களை மறந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றுபடுவோம்' என்றார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயாலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்கரம பெரேரா, ரவி கருணாநாயக்க, பீ.ஹரிஸன், சந்திராணிபண்டார உள்ளிட்ட மாகாண சபை பிரதேச சபை உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X