2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வட மேல் மாகாண சபை உறுப்பினராக சட்டத்தரணி ஏ.எம். கமறுதீன் நியமனம்

Super User   / 2012 மார்ச் 04 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)

வட மேல் மாகாண சபையின் புதிய உறுப்பினராக சட்டத்தரணி ஏ.எம். கமறுதீன் நாளை திங்கட்கிழமை மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல முன்னிலையில் சத்திய பிரமானம் செய்து கொள்ளவுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் ஞானக சொய்சாவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமையின் சார்பில் புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட கமறுதீன் விருப்பு வாக்கு தெரிவில் 12 இடத்தை பெற்றார்.

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விருதோடை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட கமறுதீனும் வட மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.றியாஸின் மைத்துனரவார்.


You May Also Like

  Comments - 0

  • jaleel jp Monday, 05 March 2012 05:50 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Jaleel jp Monday, 05 March 2012 06:20 AM

    மீண்டும் உங்கள் பனி தொடர எமது அக்கரைபத்து மக்களின் வாழ்த்துக்கள்,
    ஜலீல் (நல்லன்டளுவ)
    கட்டாரில் இருந்து.

    Reply : 0       0

    ROSHAN HILMEE KANAMOOLAI Tuesday, 06 March 2012 05:42 AM

    உங்கள் சேவை எமது மக்களுக்கு தேவை .உங்கள் பணியை தொடர்ந்து செய்ய யான் வாழ்த்துகிறன் (கனமூலை ஹில்மி இந்தியாவில் இருந்து)

    Reply : 0       0

    இந்தியா வேலூரிலிருந்து விருதோடை நளீபா Tuesday, 06 March 2012 06:42 PM

    லாயர் சார்....! வாழ்த்துக்கள். எமது ஊருக்கு முதன் முதலாய் மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளீர்கள். சந்தோஷமாயுள்ளது. உங்கள் சேவையால் எமது ஊர் செழுமை பெறட்டும். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    ROSHAN HILMEE KANAMOOLAI Tuesday, 06 March 2012 10:08 PM

    புனை பெயரில் இருக்கும் விருதோடை நலீபா என்பவருக்கு ரொம்பவும் லொள்ளுதான் போங்கே (கனமூலை ஹில்மி இந்தியாவிலிருந்து )

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X