2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் புத்தளம் விஜயம்

Super User   / 2012 மார்ச் 05 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையின் வடக்கில் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களது பிரச்சினைகள் மற்றும் இம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த புத்தளம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய கன்சர்வர்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டன் தலைமையிலான புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான ஹூனைஸ் பாருக் மற்றும் புத்தளம் மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இவர்கள் இன்று இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இதன்போது, கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா இனச்சுத்திகரிப்பு, அதன் பின்னரான நிலவரங்கள், மீள்குடியேற்றம் மற்றம் தற்போதைய பின்னடைவுகள் குறித்து விளக்கமளித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற தடைகள் குறித்து இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி, தேவையான வசதிகளை செய்துதர புலம் பெயர் அமைப்புக்கள் உதவ வேண்டும் என்ற பலமான கோரிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

'இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை. இது குறித்து  எதிர்காலத்தில் அதிகூடிய கவனம் செலுத்தப்படும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோர்டன் தலைமையிலன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X