2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அதிபரை இடமாற்றக் கோரி புத்தளம் கஜூவத்த முஸ்லிம் பாடசாலை மாணவர், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(எம்.என்.எம்.ஹிஜாஸ், மும்தாஜ்)


புத்தளம் தெற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட கஜூவத்த முஸ்லிம் பாடசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இன்று காலை பாடசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இப்பாடசாலையின் அதிபரினை இடம்மாற்றக்கோரியே இவ் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கடந்த திங்கட்கிழமை முதல் மாணவர்களினை பாடசாலைக்கு அனுப்பாமல் பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்த பெற்றோர் இன்று ஒன்றுக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இப்பாடசாலையில் கடந்த வருடங்களில் 7ஆம் ஆண்டு வரை வகுப்புக்கள் நடைப்பெற்றதாகவும் தற்போது 5ஆம் ஆண்டு வரை மாத்திரமே வகுப்புக்கள் நடைபெறுவதாகவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினனொருவர் தெரிவித்தார்.

பாடசாலையினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு அதிபரே தமக்கு தேவையென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X