2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு - சிலாபம் வீதியில் விபத்து; இருவர் பலி

Super User   / 2012 மார்ச் 08 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

கொழும்பு - சிலாபம் பிரதான வீதியின் வென்னப்புவ, வைக்கால் போலவத்தை பகுதியில் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டி ஒன்று டிப்பர் ரக லொறியுடன்  நேருக்கு நேர் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவருமே படுகாயங்களுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான  மேர்வின் சில்வா மற்றும் கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.ஏ. திலுக் ஹர்ஷ ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X