2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

எப்பாவல வாகன விபத்தில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 09 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம், எப்பாவல நகரை அண்மித்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.30  மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் காரியாலயத்துக்கு சொந்தமான கெப் வாகனமொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று எப்பாவல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக பயணித்த கெப் வாகனம் எதிரே சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதுடன் இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் வீதியோரமிருந்த கடையொன்றில் மோதியதால் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் எப்பாவல, திவுல்வௌ பகுதியைச் சேர்ந்த மஹிந்த செனவிரத்ன (வயது 52) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார். படுகாயமடைந்த கெப் வாகன சாரதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற பிரதேசவாசிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவ்விடத்திலிருந்து கெப் வாகனத்தை அகற்றமுற்பட்ட பொலிஸாருக்கு இடையூறுகளையும் ஏற்படுத்தினர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை எப்பாவல பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X