2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தலவில அன்னம்மாள் தேவாலய உற்சவத்தையொட்டி விசேட போக்குவரத்து

Suganthini Ratnam   / 2012 மார்ச் 10 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

தலவில புனித அன்னம்மாள் தேவாலய உற்சவத்தை முன்னிட்டு ரயில் திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பன விசேட சேவைகளை  இன்று சனிக்கிழமை  தொடக்கம் ஆரம்பித்துள்ளன.

கொழும்பு மற்றும் மொறட்டுவ ஆகிய இடங்களிலிருந்து இன்று சனிக்கிழமை காலை 9 மணி மற்றும் 10 மணிக்கும் மாலை 3 மணிக்கும் பாலாவி வரை ரயில்  சேவைகள் நடத்தப்படுவதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாலாவி ரயில் நிலையத்திலிருந்து தலவில வரை விசேட போக்குவரத்து சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை நடத்துகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X