2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பொலன்னறுவை மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு ஊக்குவிப்பு

Super User   / 2012 மார்ச் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுசரனையில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலக பிரிவுகளில் அலங்கார மீன் வளர்ப்பு ஊக்குவிப்புகக்கள் இடம்பெற்று வருகின்றன.

இத்துறை சார்ந்தவர்களின் தொழில் துறையை மேலும் வளப்படுததும் வகையில் சுமார் 8.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் 225 பயனாளிகளுக்கு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

பொலனறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனினால் உரிய பயனாளிகளிடம் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப்.கே.மரைக்கார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X