Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 மார்ச் 15 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித்தனர்.
Kanavaan Friday, 16 March 2012 01:24 AM
விமலை மிஞ்சிய இந்து மதகுரு வாழ்க.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Friday, 16 March 2012 05:09 AM
எல்லோர் காதிலையும் பூ சுற்றி விட்டு அரசியலில் ஈடுபட போகிரார்போல் தெரிகின்றது ... நடக்கட்டும் நடக்கட்டும்.
Reply : 0 0
maheswaran Thilipan Friday, 16 March 2012 03:44 PM
நீங்களுமா ஐயர் ! இது ரொம்ப கொடும சரவணா.................
Reply : 0 0
waaqiff Friday, 16 March 2012 04:08 PM
இதுதான் நாட்டின் நிலைமை. விரும்பியோ விரும்பாமலோ இதில் ஈடு பட வேண்டும் !!!!!
Reply : 0 0
jeyarajah Friday, 16 March 2012 06:53 PM
சத்தியாக்கிரகம் சரியில்லை, உண்ணாவிரதம்தான் உடம்புக்கு நல்லது. ஆரிடம் என்ன கோரிக்கை என்பதுதான் எமக்கு புரியவில்லை. கடவுள் இடமா அல்லது அமெரிக்காவிடமா?
Reply : 0 0
xlntgson Sunday, 18 March 2012 02:52 AM
Podhuvaaga arasukku aadharavaaga paesinaal 'arasa suga poagam anubavitthuk kondu kan moodi aadharavu' enbaargal, aanaal palanai edhir paaraamal pani aatrubavargal irukkinranar. thirupthi illaamal iruppadhaaga kaattik kondaaleye melum uzhaikkalaam enru edhirvaadham paesuginravargale adhikam irukkinranar, nanri enraal enna, panam thaeduvadhe kuriyaa? Kadavulukku onru manidharukku vaeru thoatramaa? Yaar dhaan manam vittu paesuvadhu? Mayakka/poadhai nilaiyilum arai thookkatthilum dhaan unmai varumo? (subconscious)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 May 2025
24 May 2025
24 May 2025