2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நல்லாந்தழுவைக் கிராமத்தில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 16 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்,எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நல்லாந்தழுவைக் கிராமத்தில் வடமேல் மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை நேற்று வியாழக்கிழமை மாலை  திறந்து வைக்கப்பட்டது.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கங்களுக்கு ஏற்ப சுகாதாரமான,  ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கிலும் இவ்வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.

வடமேல் மாகாண சுகாதார, சுதேச வைத்திய,  விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அசோக வடிகமங்கா, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான விக்டர் அண்டனி பெரேரா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு வைத்தியசாலையினைத் திறந்து வைத்தார்கள்.


  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Friday, 16 March 2012 08:16 PM

    ரொம்ப அருமையான திட்டம் யஹியா அவர்களே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X