2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் சென் அன்றூஸ் ஆரம்ப பாடசாலைக்கு கணினிகள் கையளிப்பு

Kogilavani   / 2012 மார்ச் 17 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்) 

புத்தளம் சென் அன்றூஸ் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றொர்களினால் பாடசாலைக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு கணினிகளினை கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைப்பெற்ற போது இக் கணினிகளினை பெற்றோர் பாடசாலை அதிபரிடம் கையளித்தனர்.

இதன்போது முப்பது மாணவர் தலைவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X