Suganthini Ratnam / 2012 மார்ச் 18 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய கருக்குப்பனை தேவாலயத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரியொருவர் பலியாகியுள்ளதாக வவுனியா சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சென்றுகொண்டிருந்த இந்நபர் மீது ஆடைத் தொழிற்சாலையொன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மோதியே இவர் பலியானதாக பொலிஸார் கூறினர்.
கருக்குப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago