2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சியம்பலாவெவ குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சீ.எம்.ரிஃபாத்)

குருநாகல் மாவட்டத்தின் கொப்பேய்கன பொலிஸ் பிரிவிலுள்ள  சியம்பலாவெவ குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம்  நேற்று திங்கட்கிழமை மாலை கொப்பேய்கன பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டது.

இச்சடலத்தின் முகம் பொலித்தீனக்ல்  மூடப்பட்டிருந்ததுடன்,  மார்பகப் பகுதிகளில் நூல்களால் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார்,  இதுவொரு கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணையை கொப்பேய்கன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X