2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

உலக நீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள்

Kogilavani   / 2012 மார்ச் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ், அப்துல்லாஹ், இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)

உலக நீர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுவதை இதனையொட்டிய பல்வேறு வேலைத்திட்டங்களை இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளையின் கீழ் செயற்படும் முஸ்லிம் மாணவர் அமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக அதன் பொறுப்பாளர் அர்சத் அலி தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டம் தொடர்பாக புத்தளம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று இரவு புத்தளம் ஜமாத்தே இஸ்லாமியின் எஸ்.எப். ஆர். டி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஜமாத்தே இஸ்லாமியின் கிளைச் செயலாளர் எம். எச். எம். நதீர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது உலக நீர் தினத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

இதன்படி நாளை மறுதினம்  23 ஆம் திகதி இரவு நீரைச் சிக்கனமாய் பாவிப்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணப்படம் ஒன்று புத்தளம் ஹூதாப் பள்ளி மைதானத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

சனிக்கிழமை இரவு புத்தளம் கடற்கரை நூலகத்திற்கு அருகிலும் இத்திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது.

இதில் நீரை சிக்கனமாகப் பாவிக்க வேண்டியதன் அவசியம், நீர் வளம் வீண்விரயமாக்கப்படும் வகைகள், புத்தளம் மாவட்டத்தின் நீர் வளங்கள் பற்றிய தரவுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X