2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தங்கொட்டுவயில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

தங்கொட்டுவ, யோகியான, கல்வக்க பிரதேசத்தில் உள்ள களி வெட்டப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள நீர் நிறைந்த குழி ஒன்றில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த டீ.எம்.கமலாவதி (வயது 60) மற்றும் அப்பெண்ணின் உறவினரான டீ.எம்.இரேஷா லக்மாலி (வயது 27) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இப்பிரதேசத்தில் முன்னர் களி வெட்டப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள கிடங்கினுள் சிலர் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் ஏற்பட்ட பள்ளத்தினுள் இவ்விருவரும் சிக்கியே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இவர்கள் இருவரினதும் உடல்கள்  பிரதேசவாசிகளால் கரைசேர்க்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவ்விருவரும் வழமையாக இந்தப் பள்ளத்தினுள் குழிப்பதற்காக தினமும் மாலையில் சென்று வந்துள்ளதுடன், நேற்று அதிக துணிகள் துவைக்க வேண்டியிருந்தமையினால் நேரத்துடன் குளிக்கச் சென்றதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X