2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மிஹிந்தலை வெலிவீவ குளத்தினை புனரமைக்க ஜப்பான் நன்கொடை

Super User   / 2012 மார்ச் 22 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


அநுராதபுரம், மிஹிந்தலை பிரதேசத்திலுள்ள வெலிவீவ குளத்தினை புனரமைப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் சுமார் 11 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜப்பானிய அரசின் அடிமட்ட மனித பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் ரஜரட்ட ஜனசஹன மன்றத்தினால் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

இப்பகுதியில் வாழும் சுமார் 300 குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் தேசத்திற்கு மகுடம் 2012 அபிவிருத்தி திட்டம் மூலம் அநுராதபுர மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டை கொண்டுவர அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கும் இத்திட்டம் ஆதரவு வழங்கவுள்ளது.

இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய  தூதுவர் மற்றும் ஜரட்ட ஜனசஹன மன்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அசோக்க இந்திக்க விக்ரமகே ஆகியோர் கையொழுத்திட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X