2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் 'ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்'

Suganthini Ratnam   / 2012 மார்ச் 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்'  இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒரு கோடி ரூபா பெறுமதியில் புத்தளத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. வீதி அபிவிருத்திப் பணிகள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட  அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

புத்தளம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேவைகள் மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லினை புத்தளம் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் நகரசபைத் தலைவருமான கே.ஏ.பாயிஸ் நாட்டிவைத்தார்.  புத்தளம் நகரசபை உறுப்பினர் தி.முஜாஹித்துல்லா, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • muralitharan Saturday, 24 March 2012 01:46 AM

    சபாஷ் தலைவரே இதை எப்போ செய்திருக்க வேண்டியது. அடுத்த தேர்தலுக்கு கைகொடுக்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X